பொதுவாகவே மனிதர்களை புரிந்துக்கொள்ளுவது மிகவும் கடினமாக விடயம் தான். காரணம் பெரும்பாலான மனிதர்களின் சிந்தனை, பேச்சு மற்றும் செயல் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் ஆளுமை மற்றும் விசேட இயல்புகளில் பெரிதும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களை மற்றவர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறாக புரிந்துக்கொள்வது வழக்கம். அவ்வாறு அடிக்கடி மற்றவர்களால் தவறாக புரிந்துக்கொள்ளப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே மர்மம் நிறைந்தவர்களாக இருப்பார்ககள். இவர்கள் பெரும்பாலும் வெளிப்படையாக எதையும் பேசுவது கிடையாது.
இவர்கள் சிறிய விடயங்களுக்கும் கூட அதிகம் உணர்ச்சிவசப்படுவது வழக்கம். இந்த குணத்தின் காரணமாக மற்றவர்கள் இவர்களை பல தருணங்களில் தவறாக புரிந்துக்கொள்வார்கள்.
இவர்களை புரிந்துக்கொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கும். இவர்களுடன் நெருங்கி பழகும் நபர்களால் மட்டுமே இவர்களை புரிந்துக்கொள்ள முடியும்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் கருத்துக்களை சற்று கடுமையாக சொல்லும் தன்மை கொண்டவர்கள்.
இவர்கள் தங்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதில்லை. இவர்களின் கடுமையான குணத்தை பெரும்பாலும் மற்றவர்கள் தவறாகவே புரிந்துக்கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.
மிதுனம்
மிதுன ராசியினர் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் பேசுவதும் நினைப்பதும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்களுக்கே புரிவது கிமையாது.
இவர்கள் எப்போதுமே ஒரு நிலையற்ற தன்மையில் இருப்பதால் இவர்களை புரிந்துக்கொள்வது மற்றவர்களுக்கு சவாலாக விடயமாக இருக்கும்.
மிதுன ராசிக்காரர்களின் நோக்கம் இவர்கள் அதை செயல்படுத்தும் விதம் ஆகியன இவர்களை பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்.