பொதுவாகவே திருமண வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் திருமணம் செய்துக்கொள்ளும் பெண் குடும்பத்தை அனுசரித்து வாழும் குணம் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியம்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறப்பெடுத்த பெண்கள் திருமண வாழ்க்கைக்கு மிகுவும் பொருத்தமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.
சாஸ்திரங்களின் அடிப்படையில் 27 நட்சத்திரங்களில் சில நட்சத்திரங்கள் ராட்சச என்று அழைக்கப்படுகின்றன.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமான சிறப்பு கொண்டவர்களாக இருப்பதுடன் உலகில் தலைசிறந்த மனைவிகளாகவும் திகழ்கின்றார்கள்.
அந்தவகையில் குறிப்பாக அவிட்டம், விசாகம், திருவோணம், சதயம், சித்திரை, மகம், ஆயில்யம் மற்றும் கார்த்திகை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகவும், சிறந்த மனைவியாகவும் இருப்பார்களாம்.
இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களின் விசேட குணங்கள் மற்றும் ஆளுமை குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
விசேட குணங்கள்
இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு திருமண உறவின் மீது அதிக நம்பிக்கை இருக்கும் அதே நேரம் திருமணத்தின் மீது அதிக மரியாதையையும் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் புகுந்த வீட்டில் உள்ள உறவுகளையும் தங்களின் உறவுகளாக நினைத்து அனுசரித்து வாழும் தன்மையை இயல்பாகவே கொண்டிருப்பார்கள்.
இவர்கள் அனைத்து சூழ்நிலையிலும் தங்கள் கணவருக்கு பக்க பலமாக இருக்கின்றார்கள். குறிப்பாக இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு நிதி முகாமைத்துவ பண்புகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
இவர்களின் நிதி சார்ந்த அறிவு குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுவாக்குவதில் பெரிதும் துணைப்புரிகின்றது.
இவர்களுக்கு விட்டுக்கொடுப்பும் சகிப்புத்தன்மையும் மிகவும் அதிகமாக இருப்பதால், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மிகவும் சாமர்த்தியமாக சமாளித்துவிடும் தன்மையை கொண்டிருப்பார்கள்.
இவர்கள் தீவிர ஆன்மீக பற்று கொண்டவர்களாகவும் இறை நம்பிக்கை அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் குடும்பத்துக்கான எதையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். குழந்தைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்கள் மிகவும் அதிர்ஷ்சாலிகளாக இருப்பார்கள்.
இவர்கள் சிறந்த குடும்ப தலைவியாகவும் கணவனுக்கு மகிழ்ச்சியை பரிசளிக்கக்கூடிய மனைவியாகவும் தங்கள் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொண்ட தாயாகவும் இருப்பார்கள்.