ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் கிரகங்களின் தலைவனானவும் சிம்ம ராசியின் அதிபதியாகவும் திகழும் சூரிய பகவான் மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுகின்றார்.
அந்த வகையில் சமீபத்தில் தான் சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
குறித்த ராசி மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்ற போதிலும் குறிப்பிட்ட சில ராசியினருக்கு பல்வேறு வகையிலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது.
அப்படி இந்த சூரிய பெயர்ச்சியால் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதுடன் பண மழையில் நனையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சூரிய பகவான் நிலைப்பெற்றுள்ளமையால் இந்த மாத இறுதியில் இருந்து மேஷ ராசியில் பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தொழில் ரீதியில் எதிர்பாரத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலை ஆரம்பிக்கும் பல வாய்ப்புகள் அமையும். பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான பாதைகள் திறக்கும்.
குடும்பத்தில் உறவுகளிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திடீர் பணவரவுகள் ஏற்பட்டு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சி இவர்களுக்கு பொற்காலமாக அமையும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய பெயர்ச்சி பலன்கள் பல்வேறு வகையிலும் சாதகமாக இருக்கும்.
நிதி நிலையில் பெருமளவில் உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றது. இந்த மாதத்தில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
தொழிலில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆம் வீட்டில் சூரியன் இருப்பதால், கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் இருந்து சில மாதங்கள் வரையில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
வியாபாரத்தில் ஈடுப்படுபவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி நல்ல லாபத்தை பெற்றுக்கொடுக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெரும் வாய்ப்பு காணப்படுகின்றது.
வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும். தொழில் ரீதியாக கும்ப ராசியினருக்கு அமோகமான பலன்கள் கிடைக்கப்போகின்றது.