Loading...
ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர்களில் இதுவரை விமான பயணம் செய்யாதவர்களுக்கு மட்டும் தனி விமானம் மூலம் இலவச பயணம் வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
Loading...
விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்ளூர் முனையங்களின் அருகே வேலை பார்த்த போதும் விமானத்தில் பயணம் செய்யாமல் பலர் உள்ளனர். அந்த வகையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும், விமான பயணம் செய்திராத பெண் ஊழியர்களை தேர்வு செய்து இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் 50 பெண் ஊழியர்கள் சிறப்பு விமானம் மூலம் ஆக்ராவிற்கு பயணம் செய்ய உள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மகளிர் தின சிறப்பு விமானத்தினுள் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் செய்தியாளர்கள் உட்பட பெண்கள் மட்டுமே இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை அனுசரிக்கும் விதமாக பல்வேறு மகளிர் சிறப்பு விமானங்களை இயக்க கடந்த ஒரு மாதமாக திட்டமிடப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் அயராது உழைத்து வரும் பெண் ஊழியர்களை முதல் முறை விமான பயணம் அழைத்துச் செல்ல ஜாய் ரைடு திட்டத்தை ஏர் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
Loading...