யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம் துயரத்தைஏற்படுத்தியுள்ளது .
இதேவேளை யாழ் வடமராட்சி பகுதியில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அடிக்கடி சுகயீனமுற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
சோகத்தில் பிரதேசவாசிகள்
இந் நிலையில் நேற்றைய தினம் சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்
நெல்லியடி செல்லமுத்தூஸ் புடவைக்கடையில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த கரவெட்டி கப்பூது பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் துசிகரன் வயது 34 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
மேலும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் .
பருத்தித்துறை கூவில் பகுதியைச் சேர்ந்த சிவதாஸ் வயது 26 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களின் தொடர் உயிரிழப்பு வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.