ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை,விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் பேச்சாற்றலில் மன்னர்களாக இருப்பார்களாம். இவர்கள் பேசும் விதம் மற்றவர்களை விரைவில் இவர்கள் வசப்படுத்திவிடும் அளவுக்கு சுவாரஸ்யமாகவும் வசீகரமாகவும் இருக்குமாம்.
அப்படி பேச்சாற்றலால் அனைவரையும் வெல்லும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் அறிவாற்றலின் அதிபதியான புதன் கிரகத்தால் ஆளப்படுகின்றார்கள். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே சிறந்த பேச்சாற்றல் இருக்கும்.
இவர்கள் மக்களுடன் தொடர்புப்படும் துறைகளில் தொழில் புரிந்தால் சிறந்த முன்னேற்றம் அடையலாம். இவர்களின் பேச்சுக்கு மயங்காத ஆட்களே இருக்க மாட்டார்கள்.
அந்தளவுக்கு இவர்கள் வசீகரமாகவும் நகைச்சுவையாகவும் மற்றவர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு பேசும் திறனை பெற்றிருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி கிரகங்களின் ராஜாவான சூரியன், அதனால் இவர்களுக்கு இயல்பாகவே மற்றவர்களை அடக்கியாளும் திறன் அதிகமாக இருக்கும்.
பேச்சாற்றல் மூலம் விரைவாக உறவுகளை உருவாக்கிக்கொள்ளும் தன்மை இவர்களுக்கு இருக்கும்.
இவர்கள் எந்தவொரு பிரச்சினை குறித்தும் தெளிவாகவும் விரிவாகவும் பேசும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் பெண்களை பேசியே மயக்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதியும் புதன் கிரகமாக இருப்பதால் இவர்கள் இயல்பிலேயே பேச்சாற்றலில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் பேச்சாற்றல் மூலம் எந்த வயதினரையும் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.அதனால் இவர்களுக்கு எல்லா வயதினரும் இலகுவில் நண்பர்களாகிவிடுவார்கள்.