பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவருடைய பிறந்த திகதி, மாதம், வருடம், ஆகிய அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறும் பழைமையான முறையாகும்.
எண்கணித சாஸ்திரத்தின் பிரகாரம் பிறப்பெண்ணுக்கும் அவர்களின் திருமண வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் பிறப்பெண்ணின் அடிப்படையில் எந்த எண்காரர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை ழுழுவதும் மகிழ்ச்சியும் சுவாரஸ்யமும் குறையாத குடும்ப வாழ்க்கை அமையும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமண வாழ்வுக்கு உகந்த எண் பொருத்தம்
பிறந்த மாதம் எதுவாக இருந்தாலும் 1, 10, 19 அல்லது 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் மூல எண்(Radix Number) 1 ஆக இருக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்க வேண்டுமாயின் 2, 4, 6 என்ற மூல எண் உடையவர்களை திருமணம் செய்வது சிறப்பு.
அது போன்று 2, 11 அல்லது 20 ஆகிய திகதிகளில் பிறந்தவருக்கு மூல எண் 2. இவர்கள் 1, 3 அல்லது 6 என்ற மூல எண் கொண்டவர்களை திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 3 ஆகும். இவர்கள் 2, 6 அல்லது 9 ஆகிய மூல எண் கொண்டவர்களை திருமணம் செய்துக்கொண்டால், அவர்களின் வாழ்க்கை செல்வ செழிப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
அது போல் 4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கு 4 மூல எண்ணாக இருக்கும். இவர்களுக்கு 1, 2, 7 அல்லது 8 என்ற மூல எண்களை கொண்டவர்கள் சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பார்கள்.
5, 14 அல்லது 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 5. இவர்கள் 5 மற்றும் 8 மூல எண்களைக் கொண்டவர்களை வாழ்க்கை துணையாக தெரிவு செய்தால் வாழ்க்கை முழுவதும் திருமண வாழ்வு இனிமையானதாக அமையும்.
6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 6. இவர்கள் எந்த மூல எண் கொண்டவர்ககளை திருமணம் செய்தாலும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
7, 25 அல்லது 16 ஆம் திகதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 7 ஆகும். இவர்களுக்கு 1 அல்லது 8 என்ற மூல எண்களைக் கொண்ட நபர்கள் மட்டுமே சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பார்கள்.
8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 8 ஆகும். இவர்கள் 2, 3, 5, 6 ஆகிய மூல எண்களில் பிறந்தவர்களுடன் இணைந்தால் இவர்களின் திருமண வாழ்க்கை அனைவரும் பொறாமை படும் அளவுக்கு வெற்றிகரமானதாக இருக்கும்.
அது போல் 9, 18 அல்லது 27 ஆம் திகதிகளில் பிறந்திருந்தால், மூல எண் 9. இவர்கள் 1, 3, 5, 6 ஆகிய ஏதேனும் ஒரு மூல எண்கொண்டவரை கரம் பிடித்தாால் திருமண வாழ்க்கை சூப்பராக இருக்கும் என எண்கணித சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.