பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை
அந்த வீட்டிற்கு சென்ற பொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இராஜதந்திர விடுபாட்டுரிமை காரணமாக பொலிஸார் அந்த வீட்டிற்குள் செல்லவில்லை என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை முறைப்பாடு செய்த நபர் அவசரகடவுச்சீட்டின் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.