எண் கணித ஜோதிடம் வாழ்வின் பல அம்சங்களைப் பற்றி தனித்துவமாகவும் துள்ளியமாகவும் கணித்து கூறும் ஒரு பழமையான சாஸ்திரமாகும்.
பொதுவாக ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அது போல் எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் வகையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
இயல்பாகவே பிரபஞ்சத்தில் எண்களுக்கு தனித்துவமான ஆற்றல் இருக்கின்றது. எண்களால் ஒருவரை வாழ வைக்கவும் முடியும் அது போல் வீழ்த்தவும் முடியும்.
அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் அமைந்திருக்கும்.
இவர்கள் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் பணத்துக்கு பஞ்சமே இல்லாமல் வாழ்வார்களாம்.
ஒருவரின் கூட்டு எண் அடிப்படையிலேயே அவர்களின் எதிர்காலம் மற்றும் விசேட ஆயுமைகள் கணிக்கப்படுகின்றது. உதாரணமாக உங்கள் பிறந்த தேதி 28என்றால் உங்கள் கூட்டு எண் 1ஆகும்.
அப்படி (எண் 9 ) 9, 18,27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், எண் கணித ஜோதிடத்தின் பிரகாரம் அவர்களின் மூல எண் 9 ஆகும்.
இந்த மூன்று திகதிகளில் பிறந்தால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் நிதி நிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்கால வாழ்க்கை
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒருபோதும் பணகஷ்டத்தை சந்திப்பதே கிடையாது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடன் ஆடம்பரமாக வாழும் யோகம் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் 9ஐ மூல எண்ணாக கொண்டவர்கள் மிகுந்த புத்தி கூர்மை கொண்டவர்களாகவும் சிறந்த நிதி முகாமைத்துவ திறனை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் நினைத்த விடயத்தை அடைவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் ஆற்றல் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் பொதுவாக உயர் பதவிகளை வகிக்கிறார்கள். இவர்கள் வியாபரம் மற்றும் தொழில் விடயங்களில் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
9ம் எண் கொண்டவர்கள் செல்வம் சம்பாதிப்பதில் வல்லவர்களாக இருக்கும் அதே நேரம் தங்களின் சுய விருப்பங்களை யாருக்காகவும் தியாகம் செய்யவே மாட்டார்கள். இவர்கள் சுதந்திரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் யாருடைய தலையீட்டையும் விரும்ப மாட்டார்கள். இவர்கள் இயல்பாகவே ராஜாவை போல் வாழும் குணநலம் கொண்டவராக இருப்பார்கள். அவர்களை தேடி பணமும் புகழும் வந்துக்கொண்டே இருக்கும்.