ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறப்பெடுக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் திருமண வாழ்வில் சற்று கடுமையான குணம் கொண்டவர்களாகவும் கணவனை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி கணவனை அடிமையாக்கி தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் காதல் விடயத்தில் மிகுந்த ஈடுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் வாழ்க்கை துணைக்கு கனவிலும் துரோகம் நினைக்க மாட்டார்கள். அந்தளவுக்கு திருமண உறவில் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துக்கொள்ளும் இவர்கள் அதே நேர்மையை கணவனிடமும் எதிர்ப்பார்ப்பார்கள்.
அவர்கள் கணவர் தங்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அவர்களின் உண்மையான காதலை பெரும்பாலான ஆண்களால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை.
இவர்கள் அதீத காதல் காரணமாகவே கணவன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். ஆனால் இவர்களின் இந்த குணத்தால் திருமண வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகின்றது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எப்போதும் தயக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் பொரும்பாலும் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் கணவர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
கணவன் தங்களுக்கு கட்டுப்படாத பட்சத்தில் மிகுந்த மன அழுத்தம் மற்றும் விரக்திக்கு ஆளாகின்ற தன்மை இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசி பெண்கள் கணவன் விடயத்தில் அனைத்தும் தங்களின் விருப்பப்படி தான் நடக்க வேண்டும் என்ற குணத்தை கொண்டிருப்பார்கள்.
அவர்கள் திருமண வாழ்க்கை முழுவதும் கணவர் மீது ஆதிக்கம் செலுத்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அது அவர்களின் வாழ்க்கையில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதுடன், திருமண வாழ்வில் பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.