Loading...
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் பேருந்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த புலம்பெயர் தமிழர் லண்டனில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில் , அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
அந்நிலையில் கடந்த 17ஆம் திகதி பேருந்தில் தனது உறவினர் வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை கல்வியங்காட்டு பகுதியில் பேருந்தினுள் மயங்கி சரிந்துள்ளார்.
Loading...
உடனடியாக அவரை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தில் 56 வயதான புலம்பெயர் தமிழரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்றைய தினம் (27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Loading...