2025 உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா பெரும் சரிவைக் கண்டுள்ளது.
பெர்க்ஷையர் ஹாதவே டிராவல் பிரொடக்ஷன் (Berkshire Hathaway Travel Protection) வெளியிட்ட புதிய பாதுகாப்பு அறிக்கையின் படி, கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த கனடா, இந்த ஆண்டு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஐஸ்லாந்து 9வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
கனடாவின் தரவரிசை குறைவு:
கனடா தற்போது மூன்றாம் இடத்தைப் பிடித்தாலும், அதன் குறைந்த மக்கள் அடர்த்தி (உலகின் 9வது இடம்) குற்றச்செயல்கள் குறைவாகவே உள்ளதற்குக் காரணம்.
ஆய்வறிக்கையில், கனடாவில் உள்ள காட்டு உயிரினங்கள் குறித்து பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
கனடாவில் பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை:
– டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில் கரடிகள் மற்றும் moose-கள் பரவலாக காணப்படும்
– மேற்குப் பகுதிகளில் எல்க் (elk) நிறைந்துள்ளது.
– தொலைவான வடமேற்குப் பகுதிகளில் கரிபூ (caribou) காணப்படும்.
– வாகன ஓட்டத்தின்போது வெள்ளை-வால் மான் (white-tailed deer) கவனமாக இருக்க வேண்டும்.
2025 உலகின் 15 பாதுகாப்பான நாடுகள்:
1. ஐஸ்லாந்து
2. அவுஸ்திரேலியா
3. கனடா
4. அயர்லாந்து
5. சுவிட்சர்லாந்து
6. நியூசிலாந்து
7. ஜேர்மனி
8. நார்வே
9. ஜப்பான்
10. டென்மார்க்
11. போர்ச்சுகல்
12. ஸ்பெயின்
13. பிரித்தானியா
14. நெதர்லாந்து
15. ஸ்வீடன்
இந்த தரவரிசைகள் பயணிகளுக்கு உலகளாவிய பாதுகாப்பை முன்னிட்டு வழிகாட்டும் ஒரு முக்கியமான கருவியாகப் பார்க்கப்படுகின்றன.