வேத சாஸ்திரங்களின் படி கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒருவரது வாழ்வில் நடைபெற போகும் நன்மையான திமையான விடயங்கள் பற்றி கணித்து கூறப்படுகின்றன.
இது குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரக மாற்றங்கள் அவற்றிற்கான ராசியை நிர்ணயிக்கின்றன. அவ்வாறு இடம் மாறும் போது அது சில ராசியினரின் வாழ்வில் நன்மையையும் சில ராசியினரின் வாழ்வில் கெட்ட பலன்களையும் கொண்டு வரும்.
சனிபகவான் இரண்ரரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் இடத்தை மாற்றி கொண்டாலும் மற்ற கிரகங்கள் சனி இருக்கும் ராசிக்கு வரும் போது ராசிகளின் பலன்களும் மாறும்.
இப்படி தான் தீபாவளி பண்டிகை நாளில் சனி பகவான் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் பயணிக்கிறார். அதோடு பஞ்சம மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான சச ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.இது 30 ஆண்டுகளின் பின் வருகிறது.
இதன் காரணமாக அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியினரின் 2 ஆவது வீட்டில் சச மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது.
இதனால் உங்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் வந்து சேரும்.
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன் புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.
புதிய நட்பு வந்து சேருவதால் நிதி நிலமையில் ஆதாயம் கிடைக்கும்.
கிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகியுள்ளது.
உங்களுக்கு நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த பல வேலைகள் நிறைவேறும்.
பணத்தின் வருகை அதிகமாக இருப்பதால் உங்களின் தேவைகள் அனைத்தும் வெற்றி பெறும்.
கூட்டு தொழில் செய்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
உங்களுக்கு சச ராஜயோகம் ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன் வருமானம் அதிகமாகும்.
பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணத்தின் வருகை உங்களுக்கு அதிகமாக இருக்கும்.