யாழ்ப்பாணம் பலாலி வீதி – வசவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீற்றர் வீதி மக்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
வீதித்தடைகள் அகற்றம்
வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அறுரகுமார திஸாநாய க்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் குறித்த வீதியை திறந்து வைப்பது தொடர்பாக கூறியதுடன், குறித்த வீதி திறக்கப்படாமையினால் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டி யிருந்தார் .
இந்நிலையில் குறித்த வீதியை திறப்பது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதனடிப்படையில் இன்று குறித்த வீதி யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதியினால் திறந்துவைக்கப்பட்டது.
அந்தவகையில் வீதியில் காணப்பட்ட வீதித்தடைகள் இன்று காலை முதல் இராணுவத்தினரால் விலக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.