நாடாளுமன்றத்தில் தமது கட்சி சுயாதீனமாக செயற்படுவது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறுவதை வைத்து முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஐந்து பேரும் சுயாதீன அணியாக செயற்பட அனுமதிக்குமாறு தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னவென்று விமல் வீரவன்ச நேற்று சபாநாயகரிடம் வினவியுள்ளார்.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினரான தினேஸ் குணவர்தன,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிணைப்பு உள்ளது. தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு அது கிடையாது.
எனவே, அந்தக் கட்சிகள் எதிரணியில் அமர்ந்து சுயாதீன அணியாக செயற்பட்டால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.