பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டில், பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக ஒட்டுமடம் தேவாலய வீதியை சேர்ந்த சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் விஷேட குற்ற விசாரனை பிரிவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், கடந்த ஏழாம் மாதம் ஒருவரும் பத்தாம் மாதம் ஒருவரையும் கைது செய்தனர்.
மனைவி பிள்ளைகளை பிரிந்ததாக நாடகம்
விசாரனையின் பிரதான சந்தேக நபரான ஒட்டுமடம் பகுதியை சேர்ந்த நபர் தலைமறைவாக இருந்த வேளை, அவரது மனைவி பிள்ளைகள் கொக்குவில் பகுதியில் பிரிந்து வாழ்வதாக கூறி பிறரை நம்ப வைத்துவிட்டு, களவாக மனைவி பிள்ளைகளையும் சந்தேகநபர் சந்தித்து வந்துள்ளார்.
அவ்வாறு சந்திக்க வந்த நேரம் மாவட்ட விஷேட குற்ற விசாரனை பிரிவிற்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைவாக, நள்ளிரவு சந்தேக நபரின் வீட்டினை சுற்றிவளைத்து, பொலிசார் கைது செய்தனர்.
அவரிடம் விாரனைகளை மேற்கொண்ட பொழுது 2017இல் இருந்து தலைமறைவாகவும் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்புவதாக பிரதான முகவராக செயற்பட்டு, விடுதிகளில் தங்கியிருந்து பண மோசடிகள் செய்ததாகவும் மற்றும் கொழும்பில் தங்கியிருந்து ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரனையில் தெரியவந்தது.
நீதிமன்றில் பகிரங்க பிடியானை
அதேவேளை 2017ம் ஆண்டு மல்லாக நீதிமன்றில் பகிரங்க பிடியானையும் பிறப்பிக்கபட்டிருந்தமையும் மற்றும் வவுனியா நீதவான் நீதிமன்றில் 1கோடி 29 இலட்சம் மோசடி வழக்கில் தேடப்படும் பிரதான குற்றவாளியாக குறிப்பிடபட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது மல்லாக நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கில் 27இலட்சத்து 50ஆயிரம் பணமோசடியில் தேடபடும் சந்தேக நபரும் ஆவார். சந்தேக நபருக்கு எதிராக வவுனியா ,மல்லாகம்,யாழ்ப்பாணம் போன்ற நீதிமன்றில் 3 கோடியே 50ஆயிரம் பணமோசடியான வழக்கு நிலுவையில் உள்ளது.
கைதான சந்தேக நபரை யாழ்ப்பணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொழுது, இவரை எதிர்வரும் 13திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு யாழ்ப்பாணம் கொளரவ நீதிபதி ஆனந்தராஜா அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்