Loading...
பதுளை பஸ் விபத்தில் சிக்கி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஜா – எல அலெக்சாண்டர் மாவத்தை பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே தப்பிச் சென்றுள்ளார்.
Loading...
இந்த மாணவன் கடந்த முதலாம் திகதி பதுளை, துன்ஹிந்த – அம்பகஹஓய 5ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்திலேயே சிக்கி காயமடைந்தார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பதுளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Loading...