இந்த மாதத்தில் அவசர தேவைகளை தவிர கடவுச்சீட்டு பெற வருவதை தவிர்க்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விரைவில் வழமையான முறையில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டுகளின் கையிருப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெறப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
VFS வீசா
மொத்தம் 750,000 கடவுச்சீட்டுகள் கோரப்பட்டுள்ளதாகவும், அவை பகுதி பகுதியாக பெறப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாட்டு கடவுச்சீட்டு விலை மனுக்கோரல் மற்றும் VFS வீசா சம்பவங்கள் தொடர்பில் தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிய கணக்காய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.