தேவையான பொருட்கள் :
எலும்புத்துண்டுகள் – 300 கிராம்
உருளைக்கிழங்கு – 1
தக்காளி – 1
கறிவேக வைத்த தண்ணீர் – 6 கப்
கார்ன் ஃப்ளார் – 6 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை துருவிக் கொள்ளவும்.
* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* எலும்புடன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கறிவேகவைத்த தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* விசில் போனவுடன் குக்கரைத் திறந்து ஒரு கரண்டியால் நன்கு மசித்து விட்டு எலும்புகளை தனியாக எடுத்துவிட்டு சூப்பை வடிகட்டவும்.
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு சூடாக்கி கார்ன் ப்ளாரைப் போட்டு கட்டிகள் இல்லாமல் கிளறி வடிகட்டி வைத்துள்ள சூப்பை ஊற்றி கொதிக்க விடவும்.
* கடைசியாக உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.