ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையின் மீது அதீத ஈடுப்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
சுற்றுலா செல்வதிலும் ஊர் சுற்றுவதிலும் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். அப்படி ஊர் சுற்றுவதில் வல்லவர்களாக திகழும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள்.
இவர்கள் வித்தியாசமாக ஊர் சுற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை பெறுவதில் அலாதி இன்பம் இருக்கும்.
எப்போதும் சுற்றுலா செல்வதிலும் இயற்கையை ரசிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் தைரியமாகவும் சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எங்கு சென்றாலும் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். மற்றவர்களை அடக்கியாளும் குணம் மற்றும் பேச்சு இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
இவர்கள் காதல் செய்வதிலும் ஊர் சுற்றுவதிலும் மிகுந்த மகிழ்ச்சியடைய கூடியவர்களாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் அதீத கற்பனை வலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயற்கை ரசிகர்களாகவும் ஊர் சுற்றுவதை அதிகளவில் விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.
மற்ற ராசிக்காரர்கள் ஊர் சுற்றுவதையும், காதலிப்பதையும் ஜாலியாக எடுத்துக் கொண்டால், இவர்கள் அதனை வாழ்வில் மிகவும் முக்கியமான விடயமாக பார்ப்பார்கள்.