தற்போது 62 வயதாகும் காமெடி நடிகை கோவை சரளாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தை வைரலாக்கி வரகின்றது. இதற்கான முழ விபரத்தை நாம் இங்கு பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகையாக நடித்து வருபவர் கோவை சரளா. ஆச்சி மனோரமா அவர்களுக்கு பின்னர் சிறந்த காமெடி நடிகையாக இவரே மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
குறிப்பாக இவர் செந்தில், கவுண்டமணி, வடிவேலு மற்றும் விவேக்குடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் எல்லாம் பெரிதும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது.
இவரின் குடும்பம் மிகப்பெரியது. இவர் திருமணம் செய்யதாதற்கு இவரின் குடும்ப சூழ்நிலை தான் காரணமாம். தன் உடன் பிறப்புக்களின் குழந்தைகளை தன் குழந்தைகள் போல கண்டிப்புடன் வளர்க்கிறார்.
சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்யவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தார். அவர் கூறியது ‘நாம் பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம், இறக்கும் போது தனியாகத்தான் இறக்கிறோம்.
இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்று எனக்கு தோன்றியது, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பல பெற்றோர்கள் அவர்களை குழந்தைகள் பார்த்துக் கொள்ளாத காரணத்தால் தனியாகவே வாழ்க்கையை கழிக்கிறார்கள், எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை’ என பேசியுள்ளார்.
இது இணையத்தில் அதிகமாக வைரலாகியது. இவருக்கு பிள்ளைகள் இல்லை என்றாலும் அவர் நடிப்பின் மூலம் சம்பாதிக்கும் பணத்தை பல ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கிறார். தற்போது 62 வயதாகும் கோவை சரளாவின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.