இலங்கையில் ஜனாதிபதியோ அல்லது எந்தவொரு அமைச்சரோ பொதுச் சொத்தை தமது விருப்பத்தின் படி உபயோகிக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி அநுர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
நம் நாட்டு அரசியலுக்கென்று ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதிகள் நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது.
அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயற்படவேண்டும். அரசியல்வாதிகள் சட்டத்துக்குக் கீழ்படிய வேண்டும். அரசியல்வாதிகள் நாகரிகமான சட்டத்தில் இருக்கவேண்டும்.
பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியில் இருந்து ஓட்டிச் செல்லும் வாகனங்கள், சில வாகனங்களைப் பார்த்தால் அவை பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கும். அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாசாரம்.
எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கின்றோம். நாம் அதை செய்கின்றோம்.
இலங்கையில் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை தமது விருப்பத்தின்படி பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட அரசியல் எமக்கு தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.