பெண்களுக்கான சுதந்திரம், அங்கீகாரம், ஊக்குவிப்பு மற்றும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது சமூகத்தின் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விடுத்து வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்கின்றனவா? கௌரவமும் பாராட்டுக்களும் கிடைக்கின்றனவா? என்பது தொடர்பில் பொறுப்புணர்வுடன் சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியம் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டை கவனிக்கும் பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு மனைவியாக, குடும்பத்தில் தனது பொறுப்புக்களை நிறைவேற்றும் அதேவேளை பெண்களுக்குரிய உடலியல், உளவியல் மற்றும் ஆன்மீக சக்தியின் மூலம் பாரிய அளவில் சமூக சேவை ஆற்றும் வல்லமையை பெண்கள் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.