அமெரிக்காவில் 88 வயது மூதாட்டி ஒருவர் தன்னை கற்பழிக்க வந்தவனிடம், தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறி புத்திசாலித்தனமாக தப்பித்துள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Helen Reynolds(88) என்பவர் வசித்து வந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று திருடன் ஒருவன், இந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து, டேப் வயரால் மூதாட்டியை கட்டி வைத்துவிட்டு கற்பழிக்க முயன்றுள்ளான்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என முடிவு செய்த மூதாட்டி, அந்த போராட்டத்தின் மத்தியிலும் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், இதனால் தான் தனது கணவர் இறந்துபோனார் எனவும் கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட அந்த நபர், உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இதுகுறித்து மூதாட்டி கூறியதாவது, நான் சொன்ன பொய் சரியா? தவறா? என்பது குறித்து நான் ஆராயவில்லை.
ஆனால், நான் சொன்ன பொய்யால் தான் தற்போது பிழைத்துள்ளேன். எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவன் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.