பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி முடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர் மார்ச் 9-ம் திகதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலரை ஆஸ்கார் நாயகனும், இந்த படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.
ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலருக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் 7-ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்தி, அதிதிராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.