சத்தியராஜின் மனைவி தொடர்ந்து நான்கு வருடங்களாக கோமாவில் இருக்கிறார் என அவரது மகள் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
சத்தியராஜ்
கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார்.
இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். சிபிராஜ் இவரது மகன். ஹீரோவாக வில்லனாக நடித்தவர் போக போக கதை தேர்வை மாற்றிக் கொண்டு, ஹீரோ இமேஜை கழற்றி வைத்துவிட்டு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வேறு நடிப்பு திறமையை காட்டி வந்தார்.
இந்த நிலையில் இவருடைய மகன் சிபிராஜ் தன்னுடைய நடிப்பை சினிமாவில் வெளிப்படத்தி வருகிறார். மகள் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இவரின் பெயர் திவ்யா. இவர் சமீபத்தில் தன்னுடைய அம்மா பற்றி பகிர்ந்தகொண்டுள்ளார்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறியிருப்பது தனது தாயார் அதாவது நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறாராம்.
இவருக்கு பிஜி குழாய் மூலமாக தான் தான் உணவு எல்லாம் கொடக்கப்படகின்றது என கூறியிருக்கிறார். தனது தந்தை 4 ஆண்டுகளாக சிங்கிள் பேரண்டாக இருக்கிறார், அவருக்கு நான் நல்ல அம்மாவாக இருந்து வருகிறேன் என திவ்யா சத்யராஜ் மிக உருக்கமாக பகிர்ந்துள்ளார்.