பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. அப்படி நாம் தூங்கும் போது கனவு ஏற்படுவதும் இயல்பான விடயம் தான்.
அப்படி நாம் காணும் கனவில் பல நல்ல விடயங்களையும் தீய விடயங்களையும் சந்திக்க நேரிடும்.இப்படி வரும் கனவுகளுக்கு என்ன அர்த்தம் இப்படி நடக்கப்போகின்றதா என பெரும்பாலானவர்கள் குழம்பிப்போகக்கூடும்.
ஆனால் கனவில் நாம் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கப்போகின்றது என்று அர்த்தம் கிடையாது.
கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் நமது கனவில் தோன்றும் ஒவ்வொரு விடயங்களுக்கும் எதிர்காலத்தில் எமக்கு நடிக்கவிருக்கும் நன்மை, தீமைகளுக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அப்படி நமது கனவில் பாம்பை காண்டால், எதிர்காலத்தில் அதன் விளைவுகள் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
பாம்பு பற்றிய கனவுகளின் பலன்கள்
பொதுவாகவே ஜோதிட மற்றும் கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் பாம்புகள் பற்றிய கனவுகள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாக பார்க்ப்படும் அதே நேரம் பாம்புகளுடன் தொடர்புடைய ஒரு சில கனவுகள் ஆபத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் படுக்கையில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போல கனவு கண்டால் அது பாலுறவுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகின்றது.
அதாவது உங்கள் வாழ்வில் பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்கு மிக விரைவில் வாய்ப்பு கிடைக்கப்போகின்றது என கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
ஒரு பெண்ணோ ஆணோ விரைவில் உங்கள் வாழ்க்கையில் வரப்போகின்றார்கள் அல்லது திருமணயோகம் கூடிவரப்போகின்றது என்பதே இந்த கனவின் அர்த்தம்.
அதுவே பாம்பு நம்மை கடிப்பது போன்று கனவு கண்டால், அது அசுபத்தின் அறிகுறியாகவே பார்க்ப்படுகின்றது. எதிர்காலத்தில் ஏதோ கெட்டது நடக்கப்போகின்றது என்று அர்த்தம். இவ்வாறு கனவு வந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
காலில் பாம்பு ஏறுவது போன்று கனவு கண்டால், வாழ்வில் நீங்களே எதிர்ப்பார்க்காத அளவுக்கு செல்வ செழிப்பு குவியப்போகின்றது என்று அர்த்தம். குறிப்பாக கனவில் வெள்ளை பாம்பை காண்பது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
அது போல் கனவில் கருப்பு பாம்பை கண்டால், சமூகத்தில் புகழ் உயரும் என நம்பப்படுவதுடன் நீண்ட நாள் ஆசை நிறைவேறும் எனவும் கனவு சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.