வீட்டின் மொத்த கடனும் அடைவதற்கு இன்று இந்த பரிகாரத்தை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
இன்றைய காலத்தில் மக்கள் என்னதான் அதிகமாக சம்பாதித்தாலும், கடன் என்ற பிரச்சனையில் இல்லாத நபர்களை நாம் எளிதில் காணமுடிவதில்லை.
அந்த அளவிற்கு வட்டிக்கு கடன் வாங்குவது, மாதம் தவணை கட்டுவது, கார், பைக், வீடு இவற்றிற்கு கடன் வாங்கி கட்டுவது என்று கடனில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
கடன் அடைவதற்கு சில பரிகாரத்தை நாம் செய்தால், இங்கு பலன் கிடைக்கும்.
முக்கியமான நாள்
இன்று நவம்பர் 11 மிகவும் முக்கியமான நாளாகும். 11வது மாதம் 11ம் தேதி இணைந்து 1111 என்று காணப்படுகின்றது.
பொதுவாக 1 என்பது வெற்றி குறிப்பதாகவும், 4 ஒன்றுகள் சேர்ந்த நாள் என்பதால் இதனை மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகின்றது.
இந்த பரிகாரத்தினை இரண்டு முறை செய்யலாம். காலை 11.11 மணிக்கும் இரவு 11.11 மணிக்கும் செய்யலாம்.
காலையில் தவறவிட்டவர்கள் தற்போது செய்யலாம் இன்று இதனை செய்யவில்லை என்றால் 2025ம் ஆண்டு 11வது மாதம் 11ம் தேதி காத்திருக்க வேண்டுமாம்.
பரிகாரம் என்ன?
பொதுவாக பிரியாணிக்கு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பிரியாணி இலை பரிகாரம் தான் இதுவாகும். எந்தவொரு ஓட்டையோ, கிளிசலோ இல்லாத நல்ல் பிரியாணி இலை ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.
குறித்த இலையில் பச்சை நிற பேனாவில் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றும் அல்லது 1,00,000 கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதலாம். உங்களுக்கு எவ்வளவு கடன் தொகை இருக்கிறதோ அதை எழுதி கடன் விரைவில் அடைய வேண்டும் என்று எழுத வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் நீங்கள் கடன் பெற்றிருக்கும் நபரின் பெயரை அதில் எழுதி, அவரிடம் வாங்கிய கடன் அடைய வேண்டும் என்று இரவு 11.11 மணிக்குள் எடுதி வைத்துக் கொள்ளவும்.
பின்பு உங்களது முன்பு மண் அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
சரியாக மணி 11.11 ஆன பிறகு அந்த நீங்கள் எழுதி வைத்திருக்கும் பிரியாணி இலையை உங்களது தலையை 11 முறை சுற்றி அந்த விளக்கில் எரித்துவிட வேண்டும்.
மேலும், அப்படி எரிக்கும் போது மனதிற்குள் கடன் அடைய வேண்டும் என்று 11 முறை சொல்ல வேண்டும். பிரியாணி இலையை எரித்த பிறகு வரும் சாம்பலை கால் மிதி இல்லாத இடங்களில் கொட்டி விட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்துவிட்டு அமைதியாக இருந்துவிடாமல், உங்கள் பக்கத்தில் நீங்களும் முயற்சி எடுத்தும், நன்றாக சிந்தித்தும் சில யோசனைகள் செய்தும் அடைக்க வேண்டும்.