கோயிலில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் என்றாலே தனிச்சுவை தான்.
அந்தவகையில், கோவில் பிரசாதம் சர்க்கரை பொங்கலை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1kg
நாட்டு சர்க்கரை- 2kg
முந்திரி- 150g
உலர் திராட்சை- 75g
ஏலக்காய்- 10g
ஜாதிக்காய்- 1
பச்சை கற்பூரம்- சிறிதளவு
நெய்- 300g
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி சேர்த்து 2 முறை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் ஊறவைத்த அரிசியை நன்கு குலையும் வரை வேகவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனுடன் வேகவைத்த அரிசி சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வைத்து கொதிக்கவைக்கவும்.
இதற்கடுத்து இதில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும்.
இறுதியாக ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய், ஜாதிக்காய் மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து அரைத்த பொடியை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.