பிரபல நடிகராக இருக்கும் நெப்போலியன் தனது மகனின் திருமணத்திற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மனம் திறந்த நெப்போலியன்
தமிழ் சினிமாவில் 90ஸ்களின் நாயகனாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்பில் பிஸியாக இருந்த போதிலும் அரசியலையும் விடவில்லை.
இவர் சினிமாவிற்கு பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி அங்கு தொழில் செய்து வருகிறார்.
நெப்போலியன் அமேரிக்காவிற்கு செல்ல காரணம் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதனால் தான். அங்கு நெப்போலியன் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றை தொடங்கி அதில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து இருக்கின்றார்.
இந்த நிறுவனத்தை நெப்போலியன் அவர்களின் மனைவியும், மூத்த மகன் தனுஷும் பார்த்து கொள்கிறார்கள். தனுஷை மருத்துவரிடம் அழைத்து சென்ற பொழுது அவரை சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
இதன் காரணமாக தானது மகன் தனுஷீக்கு பிடித்தது எல்லாவற்றையும் நெப்போலியன் செய்து வருகிறாராம். அதில் இந்த திருமணமும் ஒன்று.
ஜப்பான் தலைநகர் டோக்கியோக்கு செல்வதும் தனுஷுக்கு மிகப்பெரிய ஆசை. அதற்காக பல ஏற்பாடுகளை செய்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அதையும் நிறைவேற்றினோம் என மன உருக்கத்துடன் நெப்போலியன் கூறினார்.