குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹிரா பென்னை சந்தித்து ஆசி பெற்றார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதமர் மோடி தனது சொந்த மாநிலத்துக்கு வரும் வேளைகளில் எல்லாம் தாயாரை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். மோடியின் தாயார் ஹிராபா பென்னுக்கு தற்போது 97 வயதாகிறது. இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலத்துக்கு வந்துள்ள பிரதமர் மோடி காந்திநகர் புறநகர் பகுதியான ரயாசான் நகரில் உள்ள தனது சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது தாயார் ஹிராபா பென்(97) காலில் விழுந்து ஆசிபெற்ற அவர், சுமார் 20 நிமிடங்கள் குடும்பத்தாருடன் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இன்று காலை சோமநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ‘ஜலாபிஷேகம்’ சிறப்பு வழிபாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.