திருமணம் என்பது இரு மனங்கள் இணைவதே. இரு மனங்கள் இணைந்தால் தான் அது திருமணம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமணம் நடந்த பின், அதே மகிழ்ச்சி நீடிக்கிறதா என்றால் சற்று கேள்விக்குறியாகி விடுகிறது.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு , ஈகோ , சின்ன சின்ன சண்டைகள் என இதெல்லாம் காரணமாக அமைந்துவிடுகிறது தம்பதிகள் பிரிவதற்கு …!
கணவன் குறித்த எதிர்மறை எண்ணங்களை மனைவி நினைப்பதும் , மனைவி குறித்த எதிர்மறை எண்ணங்களை கணவன் நினைப்பதும் , பின்னர் வாய்த்தகராறு முற்றி பிரச்சனையில் முடிகிறது.
இதற்கு அடுத்தகட்டமாக , கணவன் மனைவி இடையே உள்ள , பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக ஒரு பஞ்சாயத்து வேற. இதையெல்லாம் கடந்தாலும் மீண்டும் உருவெடுக்கும் பிரச்சன்னை . என்னதான் தீர்வு?
தொடர்ந்து கணவன் மனைவி இடையே பிரச்னை இருந்துக் கொண்டே இருந்தால் எப்படி வாழ்கை நடத்துவது என நினைத்து, வக்கீலுக்கு வேலை குடுக்க ஆரம்பிக்கிறோம்.
எப்படியோ ஒரு வழியா செட்டில்மென்ட் நடக்கும் ,டைவர்ஸ் கிடைக்கும் இருவரும் இரு வேறு திசையில் பயணிக்க தொடங்க தயாராகுகிறார்கள்.
இதற்கிடையில் அவர்கள் குழந்தைகளை பற்றி கூட கவலை பட நேரமிருக்காது , அந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது ..?
கஷ்டமோ நஷ்டமோ …… எல்லோருமே ஒவ்வொரு விதத்தில் தவறு செய்கிறோம். தவற்றை திருத்திக் கொண்டு மனம் போன போக்கில் செல்லாமல், தன் துணையுடன் பேசி , எதார்த்தமாக வாழ முடிவெடுப்பதே நல்லது.
கணவன் மனைவி இருவரும் ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது அமர்ந்து பேசுங்கள். பணம் பணம் என பேசுவதற்கு கூட நேரமில்லாமல் ஓடி கொண்டே இருந்தால் , திருமண வாழ்க்கையில் என்னதான் இருக்கிறது என வெறுப்பு வர தொடங்கி விடும்.
அதற்கான இடத்தை நாம் எப்பொழுதும் தரவே கூடாது . மனதோடு ஒன்றி ,கடைசி வரை ஒன்றாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்