பற்களை வெண்மையாக்க, பற்களின் மஞ்சள் கறையை போக்க, குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படாமல் பாதுகாக்க எப்படிப்பட்ட டூத் பேஸ்ட் பயன்படுத்த தேர்வு செய்ய வேண்டும்? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? ஏன் பல் மருத்துவரின் பரிந்துரை அவசியம் என இங்கு தெரிந்துக் கொள்ளலாம்…
பற்களின் வெண்மைக்கு!
பல கம்பெனிகள் பற்கள் வெள்ளை ஆக இந்த டூத் பேஸ்ட், அந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த கூறி விளம்பரப்படுத்துவார்கள். ஆனால், எது பற்களை வெண்மையாக்கும், எப்படி பயனளிக்கும் என நமக்கு தெரியாது.
பல் துலக்கும் முறை!
டூத் பேஸ்ட் என்பதை தாண்டி, நாம் எப்படி பல் துலக்குகிறோம் என்பதில் தான் பற்களின் வெண்மை இரகசியம் அமைந்திருக்கிறது. சிராய்ப்பு இன்றி, இனாமல் பாதிப்படையாமல் பற்கள் துலக்க வேண்டும். உண்மையில் பற்கள் வெண்மை ஆக்க நீங்கள் பல் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது தான் சிறந்தது.
மஞ்சள் கறை!
பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை அகற்றுவது மிகவும் கடினம். வெறுமென பிரஷ் செய்வதால் மட்டும் மஞ்சள் கறையை போக்க முடியாது. இதற்கென தனித்தன்மை வாய்ந்த சிகிச்சை முறைகள் மற்றும் சிறப்பு டூத் பேஸ்ட்கள் இருக்கின்றன. இதை பல் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு!
குழந்தைகள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் ஃப்ளோரைடு அளவு குறைவாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஃப்ளோரைடு குறைவாக உள்ள டூத் பேஸ்ட் தான் குழந்தைகள் பயன்படுத்த அளிக்க வேண்டும். மேலும், சுத்தமாக ஃப்ளோரைடு இல்லாத பேஸ்ட்டையும் பயன்படுத்த கூடாது. ஏனெனில், இதனால் பல் சொத்தை உண்டாக நேரிடலாம்.
டீத் ஃப்லாசிங்!
மேலும், பர்களில்ன் ஆரோக்கியம் காத்திட தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள். டீத் ஃப்லாசிங் செய்ய மறந்துவிட வேண்டாம்.
கரி!
மேலும், டூத் பேஸ்ட்களை விட கரியை கொண்டு பல் துலக்குவது அதிக பலனும், பற்களின் வெண்மையை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.