பிரித்தானியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனக் கூறியே, சாதனை எண்ணிக்கையிலான புலம்பெயர் நபர்கள் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உயிருக்கு உத்தரவாதம்
கடந்த 2022ல் 762 என இருந்த இந்த எண்ணிக்கை 2023ல் 2133 என மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தரவுகள் வெளிவந்துள்ளது. சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என இந்த நபர்கள் கூறியுள்ளனர்.
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையின் கீழ், பாலின வேறுபாடு காரணமாக துன்புறுத்தப்படும் நபர்கள் பிரித்தானியாவில் தஞ்சம் கோரலாம். ஆனால், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி சிலர் நாடகமாடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இப்படியான கோரிக்கைகளுடன் 8 நாட்டவர்கள் பிரித்தானிய நிர்வாகத்தை அணுகியதில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அந்த 8 நாட்டவர்கள், ஆப்கானிஸ்தான், எல் சால்வடார், சிரியா, எரித்திரியா, மியான்மர் (பர்மா), லிபியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் மற்றும் ஏமன் என்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.
22 சதவிகிதம் அதிகம்
மட்டுமின்றி, இதே கோரிக்கையுடன் விண்ணப்பித்துள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நைஜீரியா ஆகிய நாட்டவர்களும் வெற்றி கண்டுள்ளனர்.
லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றதில் இருந்து 16,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்கு வந்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 32,691 பேர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 22 சதவிகிதம் அதிகம் என்றே தெரிய வந்துள்ளது.