ட்விட்டரில் ஆபாச புகைப்படங்கள் பதிவிட்ட விவகாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்திய சுசித்ராவுக்கு லண்டனில் மன நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
பிரபல பாடகியான சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து சில தினங்களுக்கு முன்னர் பிரபல நடிகர்கள், நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது.
இந்த நிகழ்வு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு மூடப்பட்டது.
தன் ட்விட்டர் கணக்கு விஷமிகள் சிலரால் ஹேக் செய்யப்பட்டது என சுசித்ரா கூறினார்.
ஆனால், சுசித்ரா மன ரீதீயாக பாதிக்கப்பட்டுள்ளார் என அவர் கணவரும் நடிகருமான கார்த்திக் கூறினார்.
இதனிடையில், சுசித்ரா சென்னையை காலி செய்து லண்டனுக்கு போகவுள்ளாராம்.
அங்கு அவருக்கு மனநல சிகிச்சையளிக்கப்படும் என தெரியவந்துள்ளது.