அழகும், மணமும், மென்மையும் வாய்ந்த மலர்களால் இறைவனை வழிபடும் போது மன அமைதியும், வழிபாட்டிற்கான பயன்களும் கிடைக்கும்.
ஆனால் அனைத்து மலர்களும் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்ததல்ல. ஒரு சில மலர்களை கொண்டு குறிப்பிட்ட இறைவங்களை அர்ச்சிக்கக் கூடாது என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விநாயகர்
பொதுவாக விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது என்பார்கள். ஆனால் சதுர்த்தியில் மட்டும் விநாயகருக்கு துளசியால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு.
விஷ்ணு
விஷ்ணுவுக்கு ஊமத்தம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் அர்ச்சனை செய்யக்கூடாது.
சிவன்
சிவபெருமானை தாழம்பூவினால் அர்ச்சிக்கக் கூடாது. ஆனால் சிவராத்திரி தினத்தில் சிவனாருக்கு தாழம்பூவும் அணிவிப்பது உண்டு.
அம்பிகை
அம்பிகையை அறுகம்புல்லினால் அர்ச்சிக்கக் கூடாது.
லட்சுமி
லட்சுமிக்குத் தும்பைப் பூவினால் அர்ச்சனை செய்யக்கூடாது.
துர்கை
துர்கைக்கு அறுகம்புல்லால் அர்ச்சிக்கக் கூடாது.
சூரியன்
சூரியனுக்கு வில்வத்தால் அர்ச்சிக்கக் கூடாது.
சரஸ்வதி
சரஸ்வதிக்கு பவள புஷ்பத்தால் அர்ச்சிக்கக் கூடாது
பைரவர்
பைரவருக்கு மல்லிகையால் அர்ச்சிக்கக் கூடாது.