பொதுவகவே இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது இயல்பு. இன்னும் அறிவியலால் துல்லியமான காரணம் கூறமுடியாத விடயங்களுள் கனவுகளும் அடங்குகின்றன.
கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும்.
அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமையும் என கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது.
கனவு அறிவியலின் பிரகாரம் நாம் கனவில் காணும் விடயங்கள் அப்படியே நடக்காது அதற்கான பலன்கள் தான் கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் கனவில் மயானம், இறுதி ஊர்வலம் வந்தால் பலரும் காலையில் ஒருவித பயத்துடனும் பதற்றத்துடனும் தான் எழுவார்கள்.
ஆனால் இவ்வாறான கனவுகள் வருவதற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன அர்த்தம்?
இறப்பு பற்றிய கனவுகள் பொதுவாக கவலையை கொடுக்கும்.ஆனால் கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் அவை மிகவும் மங்களகரமானதாகவே பார்க்கப்படுகின்றது.
கனவில் ஒரு கல்லறையைப் பார்ப்பது அல்லது சடலத்தை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த பலன்களை கொடுக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.
கனவு சாஸ்திரத்தின் படி, கனவில் கல்லறை வருவது எதிர்கால வளர்ச்சி, நிதி ஆதாயம் மற்றும் மங்களகரமான விடயங்கள் நடக்கவிருப்பதன் அறிகுறியாகவே இந்த கனவு பார்க்கப்படுகின்றது.
இது உங்கள் வாழ்க்கையிலும் எதிர்காலத்திலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதற்கான அறிகுறி என கூறப்படுகிறது.
கனவில் ஒரு இறுதி ஊர்வலத்தைக் கண்டால்,நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் கூடிவரப்போகின்றது.
கல்லறைக்குள் செல்வதாக கனவு கண்டால், அதுவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த கனவு உங்கள் பிரச்சனைகள் விரைவில் முடிவடையும் என்பதைக் குறிக்கிறது.
சடலத்தை கனவில் கண்டால், விரைவில் பாரியளவில் நிதி வளர்ச்சி ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.
கல்லறையில் நன்கொடை அளிப்பதாக நீங்கள் கனவு கண்டால், விரைவில் சில சமூக நல திட்டங்களுக்கு அல்லது ஏதாவது புண்ணிய செயல்களில் ஈடுப்படுவீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.
இறப்புடன் தொடர்புடைய கனவுகள் சாஸ்திரத்தின் பிரகாரம் மிகவும் அதிர்ஷ்டம் கொடுப்பதாகவும் மங்களகரமானதாகவும் பார்க்கப்படுகின்றது.