அவதூறு வழக்கில் கைதான நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமினில் வெளியான நிலையில் பேட்டி அளித்துள்ளார்.
கஸ்தூரி பேசியது
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவான கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர், ஐதராபாத்தில் நடிகை கஸ்தூரி செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்தார்.
இந்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த கஸ்தூரி, தினமும் காலை 10.30 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை எழும்பூர் காவல் நிலையத்திற்கு வந்த கஸ்தூரி, ஆஜராகி கையெழுத்திட்டார்.
பின்னர் பேட்டி அளித்த அவர், “கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை பார்க்காமல் மிஸ் பண்ணேன். தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி” என்றார்.