உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதை இரத்த பரிசோதனை செய்துதான் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்பதில்லை. ஒருவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதனை அவரது முகத்தை வைத்தே சொல்லிவிடலாம்.
எப்படி நமக்கு போதுமான தூக்கம் இல்லையென்றால் நமது கண்களே காட்டிக்கொடுக்கின்றதோ, அதுபோல தான் நமது உடலில் விட்டமின் சத்துக்குறைபாடு இருந்தால் நமது முகமே அதனைக் காட்டிக்கொடுத்துவிடும்.
அப்படிப்பட்ட சில அறிகுறிகளைத் தான் இங்கு நாம் பார்க்கப்போகிறோம்.
வெளிறிய தோல்
உங்கள் முகம் வெளிறியது போல் காணப்பட்டால் அது கண்டிப்பாக விட்டமின் பி12 குறைப்பாட்டினால் தான் இருக்கும். நாள் முழுவதும் சோர்வாகவும், ஞாபகா சக்தி குறைவாகவும் உணர்ந்தால் அது உடலுக்கு விட்டமின் பி12 சத்து தேவைப்படுவதை உண்ர்த்துவதாகும்.
கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்படி விட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். விட்டமின் பி12 நிறைந்த உணவுகள் : மத்தி மீன், சூரை மீன், சீஸ் மற்றும் பால்.
வாய் புண்கள்
வாய் புண்கள் பொதுவாக இரும்புச் சத்து மற்றும் விட்டமின் பி குறைப்பாட்டினால் தான் ஏற்படும். இதற்கு விட்டமின் பி நிறைந்த உணவுகளான சிவப்பு இறைச்சி, சால்மன் மற்றும் பால் சாப்பிடலாம்.
உடையக்கூடிய முடி
விட்டமின் பி7 மற்றும் பயோட்டின் குறைப்பாடு காரணமாக முடிகள் உடையலாம். பொடுகுப் பிரச்சனை மற்றும் வறட்சி தன்மையும் ஏற்படலாம். இதற்காக நீங்கள் ஏதேனும் ஆன்டிபயோடிக்ஸ் எடுத்துக்கொண்டால், அது உங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். இதற்கு ஏற்ற உணவுகள் : முட்டையின் மஞ்சள் கரு, பால் மற்றும் சோயா.
கண்களில் வீக்கம்
அயோடின் குறைபாடு இருந்தால் கண்களில் வீக்கம் ஏற்படக்கூடும். எந்த காரணமும் இல்லாமல் கண்களில் வீக்கம் ஏற்பட்டாலோ, நகங்களில் வெடிப்பு ஏற்பட்டாலோ அல்லது திடீரென்று உடல் எடை அதிகரித்தாலோ அயோடின் குறைபாடு தான் காரணம்.
வறண்ட சருமத்திற்கும் அயோடின் குறைபாடு தான் முக்கியக் காரணம். இதற்கு ஏற்ற உணவுகள் : வேர்க்கடலை, தயிர், கடல் மீன் மற்றும் உப்பு.
முடி உதிர்வு
முடி உதிர்வுக்கு நிறையக் காரணங்கள் இருந்தாலும் விட்டமின் டி குறைபாடும் ஒரு காரணம் தான். இதற்கு சூரிய ஒளி, முட்டையின் மஞ்சள் கரு, சீஸ் மற்றும் பால் இவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
ரத்தக் கசிவு
பற்களில் ரத்தக் கசிவு உண்டானால் அவை விட்டமின் சி குறைபாட்டினால் உண்டாகலாம். அதிக சிட்ரஸ் பழ வகைகள் , கீரைகள் சாப்பிட வேண்டும்.