ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் துறைமுக அபிவிருத்தி திட்டம்
இந்நிலையில் இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடனான துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்த அமெரிக்க நிறுவனம், கௌதம் அதானி உட்பட அதானி குழுமத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் என்ற அமைப்பு இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு கடன்வழங்குவது குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என அதிகாரியொருவர்தெரிவித்துள்ளார்.
கடன் வழங்குவதற்கு முன்னர் திட்;டத்தின் அனைத்து அம்சங்களும் எங்களின் கடுமையான தராதரங்களை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் தொடர்ந்தும் ஆராய்ந்துவருவதாகவும் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்கான நிதிகடன் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கவி;ல்லை இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் அதானி குழுமமும் இலங்கையின் தலைநகரில் முன்னெடுத்துள்ள துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு உதவப்போவதாக அறிவித்திருந்தது. அதேசமயம் ஆசியாவில் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக இது கருதப்பட்டது.