ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு நடக்கப்போகும் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசியினர் நிதி ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கப் போகின்றார்களாம்.
குறிப்பிட்ட சில ராசியினர் பொருளாதாரரீதியாக வீழ்ச்சியை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்
அப்படி பணம் தொடர்பான சிக்கலில் மாட்டிக்கொள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
2025 ஆம் ஆண்டு மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பொளாதார ரீதியில் சில பின்னடைவுகளை கொடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் இவர்கள் பணம் தொடர்பான விடயங்களில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும். கடந்த கால பிரச்சனைகள் இந்த வருடமும் தொடரும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் வீழ்ச்சியையும் நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும் என்பதால் இந்த ஆண்டு முழுவதும் நிதி விடயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு நிதி ரீதியில் பல்வேறு வகையிலும் பாதகமான பலன்களை கொடுக்க நேரிடும்.
இந்த ராசியினருக்கு ஆண்டின் தொடக்கத்திலேயே பொருளாதார பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுவதால், அவதானமாக இருக்க வேண்டும்.
குடும்ப வாழ்க்கை மற்றும் நண்பர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த ஆதரவு கிடைக்காது. பணம் தொடர்பான விடங்களை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுகு 2025 ஆம் ஆண்டு பெரும்பாலும் பாதக விளைவுகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
நெருங்கியவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படலாம்.
2024 இல் ஆரம்பமான பணபப்பிரச்சினைகள் 2025 இல் தீவிரமடையும் இதனால் பணத்தை செலவு செய்வதில் மிகுந்த அவதானம் தேவை.