Loading...
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உடமைகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்களை தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ள முடியவில்லை என இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் தெரிவித்துள்ளது.
தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் குறித்த தகவல்களை முயற்சித்த போதும் அது தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனலின் முகாமையாளர் சங்கீதா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Loading...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளபோதும் அத் தகவல்களை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் மீளவும் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...