உணவு வீணாவது என்பது இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.
இது சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பு இரண்டையும் கடுமையாக பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் உணவுகள் வீணாகின்றன.
இது பசுமை இல்ல வாயு வெளியேற்றம், வளங்களை வீணடித்தல் மற்றும் நிதி இழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.
உணவு வீணாகுவதற்கான காரணங்கள்
வளர்ந்த நாடுகளில், அதிகப்படியான உற்பத்தி, அதிக நுகர்வு பழக்கங்கள் மற்றும் கடுமையான உணவு தர தரநிலைகள் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.
அதேசமயம், வளரும் நாடுகளில், விநியோகச் சங்கிலியில் உள்ள குறைபாடுகள் மற்றும் சரியான சேமிப்பு வசதிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
உலக மக்கள் தொகை மதிப்பாய்வு அறிக்கை 2024 ன் படி, உலகில் அதிக அளவில் உணவை வீணாக்கும் நாடுகளில் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது.
உலகில் அதிக உணவை வீணாக்கும் நாடுகள்
2024 உலக மக்கள் தொகை மதிப்பாய்வு அறிக்கையின்படி, உலகில் அதிக உணவை வீணாக்கும் முதல் 5 நாடுகள்
சீனா: உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. அதிகப்படியான உற்பத்தி மற்றும் நுகர்வு காரணமாக அதிக அளவு உணவு வீணாகிறது.
இந்தியா: சீனாவை போலவே இந்தியாவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. விநியோகச் சங்கிலி பிரச்சினைகள் மற்றும் சேமிப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக உணவு வீணாகிறது.
அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. அதிக நுகர்வு மற்றும் உணவு தரக் கட்டுப்பாடுகள் காரணமாக உணவு வீணாகிறது.
ஜப்பான்: அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாடு. உணவு கலாச்சாரம் மற்றும் அதிகப்படியான உற்பத்தி காரணமாக உணவு வீணாகிறது.
ஜேர்மனி: ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. அதிக நுகர்வு மற்றும் உணவு தரக் கட்டுப்பாடுகள் காரணமாக உணவு வீணாகிறது.