இப்படத்தில் அருண் விஜய், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அனைவர் மத்தியிலும் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சனங்களும் இப்படத்திற்கு மிகவும் சாதகமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், ரஜினி நேற்று இப்படத்தை பார்த்துக் கொண்டிருப்பதாக அருண் விஜய்க்கு போன் போட்டு சொல்லியுள்ளார்.
ரஜினி இந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்டவுடன், அருண் விஜய்க்கு ரொம்பவும் பயமாக இருந்ததாம். அவரிடமிருந்து எந்தமாதிரியான விமர்சனம் வரப்போகிறது என்பதே அந்த பயத்திற்கு காரணம். படத்தை பார்த்து முடித்ததும், ரஜினி, அருண் விஜய்க்கு போன் போட்டு, அருண் விஜய்க்கு வாழ்த்துக்கள் கூறி, அவருடைய நடிப்பையும், பாடி லாங்குவேஜையும் பாராட்டியுள்ளார்.
மேலும், கதை மற்றும் அதை படமாக்கி விதம் அவருக்கு ரொம்பவும் பிடித்ததாக கூறியுள்ளார். உண்மையை சொல்லவேண்டுமென்றால், நீங்கள் சாதித்து காட்டிவிட்டீர்கள் என்று அருண் விஜய்யிடம் கூறியுள்ளார். ரஜினியிடமிருந்து பாசிட்டிவான கமெண்டுகள் வந்துள்ளது அருண் விஜய்க்கு ரொம்பவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.