வருடத்தில் கிரக மாற்றம் நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது. இதன் மூலம் பல ராசிகளுக்கு பலன்களும் மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தான் தற்போது விருச்சகத்தில் சூரியன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகிறது.
இந்த புதாதித்ய யோகத்துடன் மூலா நட்சத்திரம் உருவாவதால் இது சக்திவாய்ந்த யோகமாக மாறப்போகிறது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் தைரியமும் அதிகரித்து பல வழிகளில் நன்மையையும் உண்டாக்கும்.
யோகங்களுள் புதாதித்ய ராஜயோகம் சக்தி வாய்ந்தது. இதன் பிடியில் மாட்டும் ராசிகள் அதிஷ்டசாலிகள். இந்த அதிஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தைரியமும், ஆத்ம விசுவாசமும் அதிகரிக்கும்.
உங்களின் ஒவ்வொரு செயற்பாடும் மற்றவர்களை ஈர்க்ககூடியதாக இருக்கும்.
இதனால் பல வழிகளில் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
தனிப்பட்ட தொழிலில் நீங்கள் இருந்தால் லாபம் பன்மடங்காக இருக்கும்.
கன்னி
அருமையான யோகத்தை பெறப்போகும் ராசி என்றால் அது நீங்கள் தான்.
சக ஊழியர்களுடன் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
தொழிலுக்கான முதலீடு செய்ய நினைத்தால் இந்த காலத்தில் செய்வது நல்லது.
வாழ்கை துணையுடன் இருந்த பிரச்சனைகள் விலகி ஒன்றாக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகரிப்பதுடன் அன்னியோன்யமும் அதிகரிக்கும்.
விருட்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் வந்து சேரும்.
அதாவது எந்த விடயங்களை நீங்கள் எடுத்து செய்தாலும் அதில் நன்மையே வந்து சேரும்.
நிதி நிலமையில் பாரிய முன்னேற்றம் கிடைக்கும்.
எதில் முதலீடு செய்தாலும் அதில் நல்ல லாபம் கிடைக்கும்.