நள்ளிரவில் சுசித்ரா டிவிட்டரில் போடப்பட்ட பதிவின் போது, அன்று இரவு அவர் எந்த பார்ட்டிக்கும் செல்லவில்லையாம்.ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டு தான் அப்படி பதிவுகள் வந்தனவாம். அவர் ட்விட்டருக்கு லெட்டர் எழுதிய பிறகு இரண்டு நாட்கள் அமைதியாக இருந்ததாம்.
அதன் பின், நடிகை த்ரிஷா நடிக்கும் ஒரு பாடல் பதிவுக்கு சென்றுவிட்டு வந்து படுத்தாராம். அவர் கணக்கு மீண்டும் ஹேக் செய்யப்பட்டு பதிவுகள் வந்தபடி இருந்தனவாம். தனுஷ் ஆபிசில் இருந்து தான் இந்த தகவலே சொல்லப்பட்டு போய் பார்த்தால், அவ்வளவும் அவர் பதிவிடாதவை.
“நீக்க முயற்சி செய்து முடியவில்லை என்பதால், போலீஸ் கம்ப்ளயிண்ட் கொடுத்தேன்.
நான் ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்லுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு என்னை வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று சேர்த்தது உண்மை. அதனால் தான் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை”என்று சுசித்ரா கூறியுள்ளார்.