ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்கள், ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் ஓர் சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை.
கோடிக்கணக்கான மக்களை மகிழ வைத்த மனோரமா அவர்களது வாழ்க்கை வரலாறு நாம் நினைப்பது போல அவ்வளவு மகிழ்வானது அல்ல.
ஆச்சி மனோரமா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் சோகம் சூழந்தே இருந்தது.
கடைசிக் காலக்கட்டத்திலும் கூட இவர் மிகவும் கடினமான வாழ்க்கையை தான் வாழ்ந்தார். மனம் மட்டுமின்றி போக போக உடலும் இவரை சோதிக்க ஆரம்பித்தது.
கால் மூட்டு வலியால் வெளியிடங்களுக்கு கூட சென்று வர முடியாத அளவு உடல்நலம் குன்றி போயிருந்தார் மனோரமா.
மனதால்,உடலால்,பிள்ளைகளால், உறவுகளால் வாழ் நாள் முழுக்க மரண அவஸ்தை பட்டுக்கிடந்த ஒரு பெண்கள் குல மாணிக்கத்தை மரண தேவதை அழைத்துக் கொண்டார்