Loading...
நடிப்பு, தயாரிப்பு என இரு வேலைகளையும் சரியாக கவனித்து செய்து வருகிறார் சூர்யா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் தான் தயாரித்திருக்கும் ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் என்ற படத்தின் புரொமோஷன் வேலைகளையும் பார்த்து வருகிறார்.
Loading...
தற்போது சூர்யா 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை தொடர்ந்து 2D மியூசிக் என்ற இசை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
இந்நிறுவனம் மகளிர் மட்டும் படத்தின் இசை உரிமையை முதன்முதலில் பெற்றுள்ளது. சூர்யாவின் இந்த புதிய தொடக்கம் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது.
Loading...