பொதுவாகவே புதிய வருடம் ஆரம்பிக்கின்றது என்றால் அனைவருக்கும் ஒருவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். சிலர் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து அடுத்த வருடத்தில் இதை செய்ய கூடாது என்றெல்லாம் முடிவுகளை எடுப்பது வழக்கம்.
குறிப்பாக அடுத்த ஆண்டுக்கான ராசிபலன் கணிப்பில் அவர்களின் ராசிக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கப்போகின்றது என்பது தொடர்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ராசிப்பலன் கணிப்பின் அடிப்படையில் ஜனவரி மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் முதல் மாதத்திலேயே பல்வேறு நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்டபு காணப்படுகின்றது.
நீண்ட நாட்களாக முயற்ச்சி செய்தும் பலனை கொடுக்காத விடயம் ஆண்டின் ஆரம்பத்திலேயே எதிர்பாராத வெற்றியை கொடுக்கும். இவர்களுக்கு ஜனவரி மாதம் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பிறக்கும். வராமல் இருந்த கடன் தொகை வந்துசேரும்.
தொழில் ரீதியாக பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றை பெற்று மகிழ்ச்சியடையும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஜனவரி மாதம் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படும்.
அதிகாரம் மிக்க உயர்ந்த பதவியில் அமரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த ராசியினருக்கு முதல் மாதத்திலேயே பணவரவு அதிகரிக்கும்.
புதிய வியாபாரம் ஆரம்பிப்பதற்கு சிறந்த காலமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்துவந்த வந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். திரமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் உருவாகும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ஜனவரி மாதம் அமோக வெற்றிகளை பெற்றுத்தரக்கூடிய சிறந்த மாதமாக அமையும்.
தொழில் ரீதியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் எதிர்ப்பாராத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் இதுவரையில் இருந்துவந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும் பொற்காலமாக அமையும்.