தீபா கணவர் மாதவன் போல ஒரு அப்பாவிப் புருஷனை பார்க்கவே முடியாதுங்க. பரிதாபம்..
டிரைவர் அனுமதி கொடுத்தால் தான் மனைவி தீபாவை சந்திக்க முடியும் கொடுமை படிங்க ..
தீபா பேரவைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று, தீபாவின் கணவர் மாதவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் கணவர் மாதவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது: கடந்த 3 மாதமாக நான் ஜெ.தீபாவுடன் இருந்து தொண்டர்களின் விருப்பப்படி செயல்பட்டேன்.
நாங்கள் இருவரும் இணைந்து பேரவை தொடர்பாக நல்ல முடிவு எடுத்துவந்தோம். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.
ஜெ.தீபா ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தது, பேரவையைத் தொடங்கியது, பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது என எதுவுமே எனக்குத் தெரியாது.
இவை அனைத்துமே தீபாவின் தனிப்பட்ட செயல்பாடுகள்தான். இப்படி ஏகத்துக்கும் புலம்பி பேட்டி அளித்திருந்தார் சில நாட்களுக்கு முன்பு.
கொதித்து விட்டாரம் தீபா. என் அனுமதி இல்லாமல் உன்னை யார் மீடியாக்களை சந்திக்கச் சொன்னது..? உன் இஷ்டத்திற்கு ஆடாதே என்று கடும் சண்டை மூண்டதாம்.
இதனால் கப்சிப் ஆகி வீட்டிற்குள் முடங்கிப் போனார் கணவர் மாதவன்.இப்போது அனைத்து கட்சி விஷயங்களையும் டிரைவர் ராஜா தான் முடிவு செய்கிறார்.
அவரது ஆலோசனையின் பெயரில் தான் தீபா செயல் படுகிறார். ராஜாவும் அவரது மனைவியும் சொல்லும் நிர்வாகிகளை மட்டுமே தீபா சந்திக்கிறார் என்று புலம்புகின்றனர் தீபா பேரவை நிர்வாகிகள்.
இது எதில் போய் முடியுமோ என்று கவலையில் கலங்கிக்கொண்டிருக்கிறார்கள் பேரவையினர்.